-->

NLC- ல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்.

Admin
By -
0

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (Neyveli Lignite Corporation) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்.எல்.சி (NLC India Limited) நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.01.2023.

குறிப்பு:- இந்த வேலைவாய்ப்புக்கான பதிவு தேதி என்.எல்.சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

NLC Recruitment 2023
NLC Recruitment 2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் NLC India Limited, Cuddalore
வகை Central Govt Jobs
பணியின் பெயர் 1. Junior Overman
2. Junior Surveyor
3. Sirdar
காலியிடங்கள் 192
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website http://www.nlcindia.in

உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் வேலைகள். உடனே விண்ணப்பியுங்கள்!!!

NLC India Limited பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிகளுக்கு மொத்த காலியிடங்கள் 192 என என்.எல்.சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • 1. Junior Overman (Trainee) - 46 காலியிடங்கள்
  • 2. Junior Surveyor (Trainee) - 13 காலியிடங்கள்
  • 3. Sirdar - 133 காலியிடங்கள்
  • NLC India Limited பணிக்கான கல்வித்தகுதி:

    1. Junior Overman (Trainee)

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Diploma in Mining or Mining Engineering or other equivalent qualification. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Valid Overman's Certificate of Competency வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். Valid First Aid Certificate வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    2. Junior Surveyor (Trainee)

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Mining or Diploma in Mining Engineering or Diploma in Mine Surveying or Diploma or Degree in Civil Engineering or National Trade Certificate NTC in Surveying and Surveyor's certificate of Competency as per CMR 2017. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    3. Sirdar

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma or Degree in any subject other than Mining Engineering and Mining Sirdar Certificate of competency issued by DGMS and valid first aid certificate or Diploma in Mining with Overman Competency Certificate issued by DGMS and valid first aid certificate. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    NLC India Limited பணிக்கான வயது வரம்பு:

    Junior Overman, Junior Surveyor இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் UR/EWS பிரிவினர் 30 வயதுக்குள்ளும், OBC பிரிவினர் 33 வயதுக்குள்ளும், SC/ST பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    NLC India Limited பணிக்கான ஊதிய விவரம்:

    Junior Overman, Junior Surveyor இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- (31,000 - 1,00,000) அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Sirdar பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.26,000/- (26,000 - 1,10,000) அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    NLC India Limited பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    Junior Overman & Junior Surveyor இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் UR/EWS/OBC (NCL) பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ரூ.300/-ம், செயலாக்க கட்டணம் ரூ.295-ம் ஆன்லைனில் கட்ட வேண்டும். SC/ST/PwBD & Ex-Servicemen பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் செயலாக்க கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Sirdar இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் UR/EWS/OBC (NCL) பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ரூ.250/-ம், செயலாக்க கட்டணம் ரூ.236-ம் ஆன்லைனில் கட்ட வேண்டும். SC/ST/PwBD & Ex-Servicemen பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் செயலாக்க கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    NLC India Limited பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    NLC India Limited பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.எல்.சி-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (http://www.nlcindia.in) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    NLC India Limited பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    http://www.nlcindia.in

    Download Notification PDF

    nlc ltd
    Time Extend Notification

    கடைசி தேதி: 16.01.2023

    Join our below-given groups for all the latest Jobs
    Whatsapp Telegram
    Instagram Google News
    Facebook Youtube
    Twitter

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)