தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு. கல்வித் தகுதி அனுபவம் மற்றும் பிற முழு விவரங்களுடன்!

Admin
By -
0

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு. கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு.
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு. கல்வித் தகுதி அனுபவம் மற்றும் பிற முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு:- தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாவட்ட அளவில் 03 (மூன்று) வழக்கு ஆலோசகர் (Case Worker)களை தேர்ந்தெடுப்பதற்கான பத்திரிகை செய்தி மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்தப் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பத்திரிகை செய்தி மற்றும் விண்ணப்ப படிவத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளமான www.kallakurichi.nic.in என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.11.2022.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, கள்ளக்குறிச்சி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் வழக்கு ஆலோசகர்
(Case Worker)
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கான காலியிடங்கள்:

இந்தப் பணிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளங்கலை சட்டப் படிப்பு | சமூகப் பணி | சமூகவியல் | சமூக அறிவியல் | உளவியல் ஆகிய பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் அரசு அல்லது அரசு சாரா திட்டத்தில் பெண்கள் தொடர்புடைய பணியில் குறைந்தபட்சம் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கான ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,000/-வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் இணையதளமான kallakurichi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ் நகல்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தினுள் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 25.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு ஆலோசகர் (Case Worker) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கள்ளக்குறிச்சி.

Download Application PDF

கடைசி தேதி: 25.11.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group

Post a Comment

0Comments

Post a Comment (0)