TNHRCE Recruitment 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.05.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 28.05.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
அலுவலக உதவியாளர் | 06 |
🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!🔊
பணிக்கான தகுதி விபரங்கள்:-
1. அலுவலக உதவியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 10-ன் படி இந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. அலுவலக உதவியாளர் | ₹. 15,700 - 58,100/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. அலுவலக உதவியாளர் | GT 18-32 years, BC/MBC/DNC 18 - 34 years, SC/SCA/ST - 18 - 37 years (01.07.2024) |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNHRCE-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 18.05.2025-ம் தேதி 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:
- சான்றொப்பமிட்ட கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள்
- அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற எவரேனும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- நேர்முகத் தேர்வில் உண்மைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- தற்போது பணியிலிருந்தால் அந்நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் பதிவு எண் அடங்கிய சான்றின் நகல்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034.
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
கடைசி தேதி | 28.05.2025 |
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
இணையதளம் | https://hrce.tn.gov.in/ |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!"
Post a Comment