சென்னை மத்திய சிறைத்துறையில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

Chennai Central Prison Recruitment

சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை-1ல் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுநர் மற்றும் நெசவு போதகர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மத்திய சிறை துறை,
புழல் சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. சமையலர்
2. லாரி ஓட்டுநர்
3. நெசவு போதகர்
காலியிடங்கள் 03
கடைசி தேதி 13.09.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. சமையலர் 01
2. லாரி ஓட்டுநர் 01
3. நெசவு போதகர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. சமையலர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சமையலர் பணியில் குறந்தது இரண்டு வருடம் சமையலர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. லாரி ஓட்டுநர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறந்தது ஒரு வருடம் ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. நெசவு போதகர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தமிழ்நாடு நெசவு (Lower Grade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

1. சமையலர்:

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடந்தவராகவும் 34 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

2. லாரி ஓட்டுநர்:

01.07.2024 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

3. நெசவு போதகர்:

01.07.2024 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. சமையலர் ₹.15900 - 58500/-
(Level-2)
2. லாரி ஓட்டுநர் ₹.19500 - 71900/-
(Level-8)
3. நெசவு போதகர் ₹.19500 - 71900/-
(Level-8)

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, புழல் சென்னை - 66.

அறிவிப்பாணை

கடைசி தேதி:13.09.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter