மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!!

CMFRI Manadapam Recruitment 2023
CMFRI Manadapam Recruitment 2023


மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!!

CMFRI Mandapam Recruitment 2023: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மண்டபத்தில் காலியாக உள்ள Field Worker பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கென மொத்தம் 01 காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியானது 29 நவம்பர் 2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நிறுவனம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், இராமநாதபுரம் மாவட்டம்
பதவியின் பெயர் Field Worker
காலியிடங்கள் 01
நேர்காணல் தேதி 29.11.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview

CMFRI Mandapam Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
Field Worker 01

CMFRI Mandapam Recruitment 2023 கல்வித்தகுதி:

Field Worker: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உடல் தகுதி மற்றும் கடற்பயணத்தை மேற்கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்
  • கடலில் நீச்சல் மற்றும் டைவிங் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தனிப்பட்ட உயிர்வாழும் நுட்பங்கள், அடிப்படை முதலுதவி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CMFRI Mandapam Recruitment 2023 வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டண விவரங்கள்:

இந்தப் பதவிகளுக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

CMFRI Mandapam Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மண்டபத்தில் 29 நவம்பர் 2023 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF