ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு:- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ பத்திரிக்கை செய்தி ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பதவிக்கு நேர்காணல் (Walk-In-Interivew) நடைபெறும் நாள் 27.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
(Veterinary Consultant)
காலியிடங்கள் 08
நேர்காணல் தேதி 27.04.2023
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

கால்நடை ஆலோசகர் பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 08 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) - 08 காலியிடங்கள்

Veterinary Consultant பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor of Veterinary Science (B.V.Sc.,) & AH பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கால்நடை ஆலோசகர் பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்தப் பதவிக்கென வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.43,000/- இதர சலுகையுடன் (Salary - Rs.30,000/- + Propulsion Charges - Rs.8,000/- - Individual Incentives - Rs.5,000/-) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Veterinary Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Veterinary Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்துடன் கல்வி தகுதி சான்று, பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27.04.2023 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு செல்லும் போது அனைத்து அசல் சான்றிதழ்களை கண்டிப்பாக உடன் எடுத்து செல்ல வேண்டும்.

நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி:-

Tirupur District Co-Operative Milk Producers Union Limited,
The Aavin Milk Chilling Centre,
Veerapandi Pirivu,
Palladam Road,
Tirupur District - 641 605.

Notification Click Here
நேர்காணல் தேதி 27.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter