மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://tiruvallur.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 23.01.2023.
மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட சுகாதாரத் துறை, திருவள்ளூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 10 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supvervisor) (STLS) - 02 காலியிடங்கள்
- ஆய்வுக்கூட நுட்புனர் (Lab Technician) - 06 காலியிடங்கள்
- சுகாதார பார்வையாளர் (காசநோய்) (Tuberculosis Health Visitor) (TBHV) - 02 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மேல்நிலைப் பள்ளி படிப்பு, இளநிலை படிப்பு மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பட்டம். நிரந்தர இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் கணினி பயன்பாட்டு முறையில் தேர்ச்சி சான்றிதழ் குறைந்தபட்சம் (இரண்டு மாத காலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Secondary School Course, Undergraduate Course and certified laboratory degree (DMLT) signed by Director of Medical Education. Permanent two-wheeler driving license and computer proficiency certificate for a minimum period of two months).
ஆய்வுக்கூட நுட்புனர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மேல்நிலைப் பள்ளி படிப்பு, இளநிலை படிப்பு மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
சுகாதார பார்வையாளர் (காசநோய்):- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மேல்நிலைப் பள்ளி படிப்பு தேர்ச்சியுடன் பல்நோக்கு சுகாதார பணியாளர் அனுபவம் அல்லது உதவி மகப்பேறு செவிலியர் அனுபவம் அல்லது காசநோய் சுகாதார பார்வையாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிரந்தர இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் கணினி பயன்பாட்டு முறை தெரிந்திருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிகளுக்கு வயது வரம்பு விவரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
- முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supvervisor) (STLS) - ரூ.19,800/-
- ஆய்வுக்கூட நுட்புனர் (Lab Technician) - ரூ.13,000
- சுகாதார பார்வையாளர் (காசநோய்) (Tuberculosis Health Visitor) (TBHV) - ரூ.13,300/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், குடும்ப அட்டை, கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் பிற பதவிக்குரிய சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து ரூ.6/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4x10 கவருடன் இணைத்து 23.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய்மையம்,
பூவிருந்தவல்லி,
சென்னை - 600 056.
Download Notification PDF
கடைசி தேதி: 23.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |