சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு:- நீலகிரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 63 செவிலியர் காலிப்பணியிடங்களை பணிநியமனம் செய்வதற்கு அறிவிப்பாணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://nilgiris.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2023.
Primary Health Centre Recruitment 2023 |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட சுகாதார சங்கம், நீலகிரி. |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Nurse |
காலியிடங்கள் | 63 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 63 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- செவிலியர் (Staff Nurse and Mid Level Health Provider (MLHP)) - 63 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் DGNM/B.Sc Nursing/B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு வயது வரம்பு விவரங்கள் அறிவிப்பாணையில் குறிப்பிடப்படவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://nilgiris.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 27.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The Executive Secretary / Deputy Director of Health Services,
The Nilgiris District Health Society,
O/o Deputy Director of Health Services,
38, Jail Hill Road,
Near CT Scan Centre,
The Nilgiris District.
Download Notification PDF
கடைசி தேதி: 27.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments