-->

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை.

Admin
By -
0

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை:- செங்கல்பட்டு சுகாதார மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 35 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நலவாழ்வு சங்கம், செங்கல்பட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://chengalpattu.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2023.

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மக்கள் நல்வாழ்வுத் துறை செங்கல்பட்டு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் செவிலியர்
காலியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2023
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு.

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 35 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. செவிலியர் (Staff Nurse) - 35 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

செவிலியர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் செவிலியர் பட்டயப்பட்ப்பு (Diploma General Nursing Mid Wives) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தின் இணையதளமான https://chengalpattu.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 27.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
செங்கல்பட்டு-603 001.

Download Notification PDF

Download Application PDF

கடைசி தேதி: 27.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)