இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆனது காலியாக உள்ள 48 இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருக்கோயில் புனரமைப்பு, பாதுகாத்தல் பணிக்கான காலியிடங்கள் மாநிலம் முழுவதும் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 20.01.2023.
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு |
Page Contents
- இந்து சமய அறநிலையத் துறை பணிக்கான காலியிடங்கள்
- TNHRCE பணிக்கான கல்வித்தகுதி
- இந்து சமய அறநிலையத் துறை பணிக்கான வயது வரம்பு
- TNHRCE பணிக்கான ஊதிய விவரம்
- TNHRCE பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்
- இந்து சமய அறநிலையத் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை
- TNHRCE பணிக்கான விண்ணப்பிக்கும் முறை
- TNHRCE பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1. மண்டல ஸ்தபதி 2. உதவி ஸ்தபதி |
காலியிடங்கள் | 48 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
இந்து சமய அறநிலையத் துறை பணிக்கான காலியிட விபரங்கள்:-
- மண்டல ஸ்தபதி - 10 காலியிடங்கள்
- உதவி ஸ்தபதி - 38 காலியிடங்கள்
TNHRCE பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:
மண்டல ஸ்தபதி:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Bachelor of Technical in Traditional Architecture) பெற்றிருக்க வேண்டும் அல்லது மரபு சிற்பக்கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்து இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களை புனரமைப்பு பணியில் குறைந்தபட்சம் 10 வருடம் அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஸ்தபதி:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Bachelor of Technical in Traditional Architecture) பெற்றிருக்க வேண்டும் அல்லது மரபு சிற்பக்கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்து இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 40 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
TNHRCE பணிக்கான ஊதிய விவரம்:
மண்டல ஸ்தபதி:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
உதவி ஸ்தபதி:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
TNHRCE பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கு என எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்து சமய அறநிலையத் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNHRCE பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் 20.01.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNHRCE பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-34.
Download Notification & Application Format PDF
கடைசி தேதி: 20.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |