அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் பிற முழு விபரங்களுடன்!

Admin
By -
0

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் பிற முழு விபரங்களுடன்!

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் பிற முழு விபரங்களுடன்!

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு:- திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆண்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருப்பூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2
(Lab Technician Grade - II)
காலியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 31 (முப்பத்தி ஒன்று) என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி ஆனது மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் படிப்பு - DMLT (இரண்டு ஆண்டுகள்) King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 59 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15000/- தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரிலும் தபால் மூலமாகவும் மின்னஞ்சல் (E-Mail Id:- mesectiongmctpr@gmail.com) மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் Hard Copy கட்டாயமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன், அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் ஆனது கல்லூரி அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab Technician Grade - II) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதல்வர்,
அரசு மருத்துவ கல்லூரி,
திருப்பூர் மாவட்டம் - 641 608.

Download Notification PDF

கடைசி தேதி: 25.11.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group

Post a Comment

0Comments

Post a Comment (0)