தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு. பதவி, கல்வி தகுதி, அனுபவம், ஊதியம், வயதுவரம்பு, காலியிடங்கள் மற்றும் பிற தகவல்களுடன்!!!

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு. பதவி, கல்வி தகுதி, அனுபவம், ஊதியம், வயதுவரம்பு, காலியிடங்கள் மற்றும் பிற தகவல்களுடன்!!!

National Health Mission Recruitment
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு. பதவி, கல்வி தகுதி, அனுபவம், ஊதியம், வயதுவரம்பு, காலியிடங்கள் மற்றும் பிற தகவல்களுடன்!!!

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு:- தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, கோயமுத்தூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிகளை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் நியமனம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28.11.2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, கோவை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல் மருத்துவர்
பல் மருத்துவ உதவியாளர்
காலியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. நிரந்தர அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிகளுக்கான காலியிட விபரங்கள் பின்வருமாறு:-

 • பல் மருத்துவர் - 08 காலியிடங்கள்
 • பல் மருத்துவ உதவியாளர் - 07 காலியிடங்கள்
 • மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான கல்வித்தகுதி:

  1. பல் மருத்துவர்

  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ் (BDS) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. பல் மருத்துவ உதவியாளர்

  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான வயது வரம்பு:

  இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான ஊதிய விவரம்:

  1. பல் மருத்துவர்

  இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.34,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

  2. பல் மருத்துவ உதவியாளர்

  இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.13,800/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  இந்த பணிகளுக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 09.12.2022-ம் தேதி காலை 10 மணிக்கு இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.coimbatore.nic.in என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களை சுய சான்றொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
  மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
  துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
  219, ரேஸ்கோர்ஸ் ரோடு,
  கோயம்புத்தூர்-18

  Download Notification and Application PDF

  கடைசி தேதி: 28.11.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join our Whatsapp Group
  Join our Telegram Group
  Follow us on Instagram
  Follow us on Google News
  Join our Facebook Group
  Subscribe our Youtube Channel