Bank of Baroda-வில் பணியில் சேர விருப்பமா? கல்வித்தகுதி, வயது வரம்பு, காலியிடங்கள் மற்றும் பிற முழுத்தகவல்கள்.
![]() |
Bank of Baroda Recruitment 2022 |
Bank of Baroda Recruitment 2022: பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கி கிளைகளில் காலியாக உள்ள 320 Senior Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.bankofbaroda.co.in) ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கான அறிவிப்பை வங்கியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயமுத்தூர் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 20.10.2022.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Bank of Baroda |
வகை | Bank Jobs |
பணியின் பெயர் | Senior Relationship Manager |
காலியிடங்கள் | மொத்த காலியிடங்கள் - 320 சென்னை - 18 கோயமுத்தூர் - 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதள முகவரி | bankofbaroda.co.in |
UCO Bank Recruitment 2022. Apply for Security Officers Posts
Senior Relationship Manager பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கு இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 320. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 07 காலியியிடங்களும், சென்னையில் 18 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Senior Relationship Manager பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்து இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Senior Relationship Manager பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.10.2022 தேதியின்படி குறைந்தபட்சமாக 24 வயதிலிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு SC/ST பிரிவினருக்கு 05 வருடங்களும், OBC (Non Creamy Layer) பிரிவினருக்கு 03 வருடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் General/EWS பிரிவினருக்கு 10 வயதும், OBC பிரிவினருக்கு 13 வயதும், SC/ST பிரிவினருக்கு 15 வயதும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் General/EWS பிரிவினருக்கு 05 வருடங்களும், OBC பிரிவினருக்கு 08 வருடங்களும், SC/ST பிரிவினருக்கு 10 வருடங்களும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Senior Relationship Manager பணிக்கான ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் தகுதிகள், அனுபவம், ஒட்டுமொத்தத் தகுதி, கடைசியாக வாங்கிய ஊதியம் பொறுத்து நிலையான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Relationship Manager பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணமாக ரூபாய்.600/- மற்றும் வரிகள் சேர்த்து கட்ட வேண்டும். SC/ST/PWD/Women பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணமாக ரூபாய்.100/- மற்றும் வரிகள் சேர்த்து கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Senior Relationship Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting and Personal Interview and/or Group Discussion and/or any other selection மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Senior Relationship Manager பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான bankofbaroda.co.in என்ற பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
Senior Relationship Manager பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
https://www.bankofbaroda.in/career/current-opportunities
கடைசி தேதி:20.10.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments