மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பில் வேலை வாய்ப்பு

Virudhunagar Recruitment 2024

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் தமிழ்நாடு நகர்ப்புர
வாழ்வாதார இயக்கம்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் சமுதாய அமைப்பாளர்
காலியிடங்கள் 08
கடைசி தேதி 05.09.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. சமுதாய அமைப்பாளர்
(சிவகாசி மாநகராட்சி)
03
2. சமுதாய அமைப்பாளர்
(அருப்புக்கோட்டை நகராட்சி)
01
3. சமுதாய அமைப்பாளர்
(இராஜபாளையம் நகராட்சி)
01
4. சமுதாய அமைப்பாளர்
(விருதுநகர் நகராட்சி)
01
5. சமுதாய அமைப்பாளர்
(திருவில்லிபுத்தூர் நகராட்சி)
01
6. சமுதாய அமைப்பாளர்
(சேத்தூர் & செட்டியார்பட்டி பேரூராட்சிகள்)
01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. சமுதாய அமைப்பாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை பெற்றிருத்தல் கட்டாயமாகும். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருட களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பில் (ALF)-ல் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன் இது போன்ற மகளிர் குழுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.


வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.08.2024 தேதி நிலையில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. சமுதாய அமைப்பாளர்
(சிவகாசி மாநகராட்சி)
₹.16,000/-
2. சமுதாய அமைப்பாளர்
(அருப்புக்கோட்டை நகராட்சி)
₹.15,000/-
3. சமுதாய அமைப்பாளர்
(இராஜபாளையம் நகராட்சி)
₹.15,000/-
4. சமுதாய அமைப்பாளர்
(விருதுநகர் நகராட்சி)
₹.15,000/-
5. சமுதாய அமைப்பாளர்
(திருவில்லிபுத்தூர் நகராட்சி)
₹.15,000/-
6. சமுதாய அமைப்பாளர்
(சேத்தூர் & செட்டியார்பட்டி பேரூராட்சிகள்)
₹.14,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நகர்ப்புர வாழ்வாதார மையம், இராஜபாளையம்.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 05.09.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter