சிவகங்கை மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள Audiologist / Speech Therapist, Data Entry Operator, Radiographer and Multi Purpose Hospital Worker ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 08 |
கடைசி தேதி | 15.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://sivaganga.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Audiologist / Speech Therapist | 01 |
2. Data Entry Operator | 01 |
3. Radiographer | 02 |
4. Multi Purpose Hospital Worker | 04 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Audiologist / Speech Therapist:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Audiology and Speech Language Pathalogy / B.Sc. (Speech and Hearing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Data Entry Operator:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் One year PG Diploma in Computer Application தேர்ச்சி மற்றும் Type writing in English and Tamil (Lower) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Radiographer:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Radiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Multi Purpose Hospital Worker:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Audiologist / Speech Therapist | ₹. 23,000/- |
2. Data Entry Operator | ₹. 11,500/- |
3. Radiographer | ₹. 13,300/- |
4. Multi Purpose Hospital Worker | ₹. 8500/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 15.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments