சென்னை HVF ஆவடி தொழிற்சாலையில் 253 10-ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

Admin
By -
0
HVF Avadi Recruitment 2024
HVF Avadi Recruitment 2024

HVF Avadi Recruitment 2024: கனரக வாகனத் தொழிற்சாலை, ஆவடி (HVF Avadi) 253 Trade Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.06.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://avnl.co.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்HVF, Avadi
Notification No.-
வகைCentral Govt Jobs
பணியின் பெயர்ITI Trade Apprentices
காலியிடங்கள்253
விண்ணப்பிக்க கடைசி தேதி22.06.2024
விண்ணப்பிக்கும் முறைOffline
Websitehttps://avnl.co.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 253 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


A) NON-ITI (10-ஆம் வகுப்பு தேர்ச்சி):

 1. Fitter - 32 காலியிடங்கள்
 2. Machinist - 36 காலியிடங்கள்
 3. Welder - 24 காலியிடங்கள்

B) EX-ITI (ITI தேர்ச்சி பெற்றவர்கள்):

 1. Electrician - 38 காலியிடங்கள்
 2. Electronic Mechanic - 10 காலியிடங்கள்
 3. Fitter - 45 காலியிடங்கள்
 4. Machinist - 43 காலியிடங்கள்
 5. Painter -  05 காலியிடங்கள்
 6. Welder - 20 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

  A) NON-ITI (10-ஆம் வகுப்பு தேர்ச்சி):

  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்தில் அந்த வாரியத்தின் அளவுகோல்களின்படி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு தேதியின்படி மெட்ரிகுலேஷன் (பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அவர்களின் மார்க்ஷீட்டின்படி) மற்றும் கணிதம் மற்றும் அறிவியலில் தலா 40% மதிப்பெண்களுடன். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


   B) EX-ITI (ITI தேர்ச்சி பெற்றவர்கள்):

   விண்ணப்பதாரர் மெட்ரிகுலேஷன் / பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   கூடுதலாக விண்ணப்பதாரர் தொடர்புடைய துறையில் ITI குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


   பணிக்கான வயது வரம்பு விபரம்:-

   22.06.2024 தேதியின்படி 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். GOI விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உள்ளது.

   அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.


   பணிக்கான ஊதிய விவரம்:-

   A) NON-ITI (10-ஆம் வகுப்பு தேர்ச்சி):

   தேந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.5000 முதல் 6000/- வரை முதல் ஓராண்டுக்கும், ₹.5500 முதல் 6600/- வரை இரண்டாம் ஆண்டு உதவித் தொகை வழங்கப்படும்.


   B) EX-ITI (ITI தேர்ச்சி பெற்றவர்கள்):

   தேந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.7700/- முதல் ஓராண்டுக்கும், ₹.8050/- இரண்டாம் ஆண்டு உதவித் தொகை வழங்கப்படும்.


   பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

   இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக் பொது பிரிவினர்கள் ₹.100/- செலுத்த வேண்டும். SC. ST, PwBD பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


   பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

   இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

   இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் AVF-ன் அதிகாரபூர்வ இணையதளமான www.avnl.co.in என்ற முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து Heavy Vehicles Factory, Avadi, Chennai - 600 054 என்ற முகவரிக்கு 22.06.2024-ம் தேதிக்குள் சேருமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

   பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

   Heavy Vehicles Factory, Avadi, Chennai - 600 054

   அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும்

   கடைசி தேதி: 22.06.2024

   Join our below-given groups for all the latest Jobs
   WhatsappTelegram
   InstagramGoogle News
   FacebookYoutube
   Twitter

   Post a Comment

   0Comments

   Post a Comment (0)