அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு!
TNRD Virudhunagar Recruitment 2023: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பதவிகளுக்கென மொத்தம் 02 காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலை வாய்ப்பு விபரங்கள்
நிறுவனம் | மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, விருதுநகர் மாவட்டம் |
பதவியின் பெயர் | அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் |
காலி இடங்கள் | 02 |
கடைசி தேதி | 07.12.2023 & 26.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலி இடங்கள் |
அலுவலக உதவியாளர் | 01 |
இரவு காவலர் | 01 |
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பத்தை விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதிற்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதுக்குள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டண விவரங்கள்:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.12.2023, இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26 11 2023.
Download Notification & Application Format
0 Comments