ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Step Centre) வேலை வாய்ப்பு!

Priya
By -
0
ஒருங்கிணைந்த சேவை மையம் :-நாகப்பட்டினம் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் 24 மணி நேர இலவச உதவி மையம் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய காலியாக உள்ள ஒரு பாதுகாவலர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிர் மட்டும்  விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://www.nagapattinam.nic.in/ என்கிற  இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(One Stop Centre) வேலை வாய்ப்பு!

அமைப்பு:-

ஒருங்கிணைந்த சேவை மையம்(One Stop Centre)நாகப்பட்டினம் மாவட்டம்.

பதவிகளின் பெயர்:-

பாதுகாவலர்(Security Guard)-மகளிர் மட்டும்

பதவிகளின் காலியிடங்கள்:-

 பாதுகாவலர்(Security Guard)- 01

சம்பள விபரங்கள்:- 

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய். 10,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி விவரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர தகுதிகள்:-

நிர்வாக அமைப்பின் கீழ் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவமுள்ள உள்ளளூறை சார்ந்த மகளிராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.

வயதுவரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:-

நாகப்பட்டினம் மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

21.07.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தின் அதிகாரப் அதிகாரபூர்வ இணையதளமான https://www.nagapattinam.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
நாகப்பட்டினம் மாவட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-



தமிழக அரசு வேலைகள் - Click Here 

Post a Comment

0Comments

Post a Comment (0)