-->

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Admin
By -
0

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு:- இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தை https://hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.05.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 07
கடைசி தேதி 11.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://hrce.tn.gov.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 07 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
தட்டச்சர் 01
உதவி மின்பணியாளர் 01
காவலர் 04
பெருக்குபவர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

தட்டச்சர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல் நிலை, அல்லது தமிழில் முதல் நிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, அல்லது ஆங்கிலத்தில் முதல் நிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத்தில் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

உதவி மின்பணியாளர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி (ITI) நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காவலர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருக்குபவர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

பதவி ஊதியம்
தட்டச்சர் Rs.18,500 - 58,600/-
உதவி மின்பணியாளர் Rs.16,600 - 52,400/-
காவலர் Rs.15,900 - 50,400/-
பெருக்குபவர் Rs.15,900 - 50,400/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் TNHRCE அதிகாரபூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 11.05.2023 ஆம் தேதி தபால் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சுயவிலாசமிட்ட ரூபாய்.25/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உரை ஒன்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவானைக்காவல்,
திருவரங்கம் வட்டம்,
திருச்சிராப்பள்ளி - 620 005.

Notification & Application Form Click Here
கடைசி தேதி 11.05.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)