Ad Code

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலை வாய்ப்பு:- திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மையின் அலகின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://tirunelveli.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலை வாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருநெல்வேலி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Website https://tirunelveli.nic.in

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை. முழு விவரங்களுடன்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 20 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர்:-

வட்டாரம் மற்றும் காலியிடங்கள்

  1. அம்பாசமுத்திரம் - 01 காலியிடம்
  2. சேரன்மகாதேவ - 03 காலியிடம்
  3. களக்காடு - 02 காலியிடம்
  4. மானூர் - 04 காலியிடம்
  5. பாளையங்கோட்டை - 03 காலியிடம்
  6. பாப்பாக்குடி - 02 காலியிடம்
  7. இராதாபுரம் - 01 காலியிடம்
  8. வள்ளியூர் - 04 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

வட்டார ஒருங்கிணைப்பாளர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பட்டம் (Any Degree) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் MS Office-ல் குறந்தபட்சம் 3 மாத சான்றிதழ் பெற்றவராக இருத்தல் அல்லது Computer Science அல்லது Computer Application-ல் பட்டப்படிப்பு பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.01.2023-ன் படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://tirunelveli.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று, அனுபவம் சான்று மற்றும் பிற சான்றிதழ் புகைப்படத்தை பதிவேற்றம் 07.03.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபாலிலோ அல்லது நேரிடையாகவோ விண்ணப்பங்கள் கண்டிப்பாக பெறப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Apply Now

Application Form

Download Notification PDF

கடைசி தேதி: 07.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments