-->

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை. சம்பளம் ரூ.65,000/-

Admin
By -
0

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை:- தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் (State Human Rights Commission, Tamil Nadu) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://shrc.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.01.2023.

State Human Rights Commission, Tamil Nadu Recruitment 2023
 தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 10 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - 02 காலியிடங்கள்
  2. தட்டச்சர் - 01 காலியிடம்
  3. அலுவலக உதவியாளர் - 06 காலியிடங்கள்
  4. இரவுக் காவலர் - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை அல்லது தமிழ் உயர்நிலை ஆங்கிலம் இளநிலை அல்லது தமிழ் இளநிலை ஆங்கிலம் உயர்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தட்டச்சர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை அல்லது தமிழ் உயர்நிலை ஆங்கிலம் இளநிலை அல்லது தமிழ் இளநிலை ஆங்கிலம் உயர்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு காவலர்:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப்பிரிவினருக்கு 32 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினர்களின் அதிகபட்ச வயது 34 வயதிற்குள்ளும், பட்டியல் பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - அடிப்படை ஊதியம் ரூ.20,600-65,500/-
  2. தட்டச்சர் - அடிப்படை ஊதியம் ரூ.19,500-62,000/-
  3. அலுவலக உதவியாளர் - அடிப்படை ஊதியம் ரூ.15,700-50,500/-
  4. இரவுக் காவலர் - அடிப்படை ஊதியம் ரூ.15,700-50,500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதளமான https://shrc.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 20.01.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

செயலாளர்,
மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு,
எண்.143,பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, (கிரீன்வேஸ் சாலை),
சென்னை - 600 028.

Download Notification & Application Form

கடைசி தேதி: 20.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)