Ad Code

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ரூபாய். 62,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு.

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ரூபாய். 62,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்!

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை.

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ரூபாய். 62,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு:- திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) காலிப்பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்களுக்கான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்திலும் மற்றும் மாவட்ட இணையதளமான www.tiruchirappalli.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 18.01.2023-க்குள் அனுப்ப வேண்டும்.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, திருச்சி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-இன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான இனசுழற்சி விபரங்கள்:

இந்த பணியானது இனசுழற்சி முறையில் பழங்குடியினருக்கு (Scheduled Tribes) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான வயது வரம்பு:

01.07.2022 தேதியின்படி பழங்குடியினர் அவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 42-க்குள் இருக்க வேண்டும் எனவும் பழங்குடியினர் (முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 55-க்குள் இருக்க வேண்டும் எனவும், மாற்றுதிறனாளிகள் (பழங்குடியினர்) பிரிவினருக்கு குறந்தபட்சம் 18 வயது முதல் அதிக பட்ச வயது 52-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.19,500/- (Rs.19,500-62,000/-) வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கான விண்ணப்பக் கட்டணம் தேர்வு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tiruchirappalli.nic.in என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களில் சுய ஒப்பமிட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை (Stamp) ரூபாய்.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை (10'x4') ஒன்று இணைத்து அனுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு),
3-ஆவது தளம்,
திருச்சி-620 001.

Download Notification & Application PDF

கடைசி தேதி: 18.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments