பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை:- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள Project Engineer - I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு தபாலில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.01.2023.
Bharat Electronics Limited Recruitment 2023 |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Project Engineer |
காலியிடங்கள் | 32 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://bel-india.in |
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 32 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Project Engineer-I - Electronics - 27 Vacancies
- Project Engineer-I - Mechanical - 05 Vacancies
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E/B.Tech (Electronics / Electronics & Communication / E&T / Telecommunication or Mechanical) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு
முதல் மாதம் Rs.40,000/-
இரண்டாவது மாதம் Rs.45,000/-
மூன்றாவது மாதம் Rs.50,000/-
நான்காவது மாதம் Rs.55,000/-
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருடத்திற்கு ரூ.12,000/- மற்ற படிகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய்.472/- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. PwBD, SC and ST பிரிவினர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Bhel நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 07.01.2023 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் உறையின் மேல் கண்டிப்பாக "Application for Project Engineer - ADSN" என குறிப்பிட வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
DGM (HR/MR,MS&ADSN),
Bharat Electronics Limited,
Jalahalli P.O.,
Bengaluru - 560 013.
Dwonload Notitification PDF
Download Application Form
கடைசி தேதி: 07.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments