-->

சிறைத்துறை வேலை வாய்ப்பு

Admin
By -
0

தமிழ்நாடு சிறைத்துறையில் வேலை வாய்ப்பு

tnpse recruitment 2022

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள Jailor பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள காலியிடங்கள் மொத்தம் 8 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு சிறைத்துறை
பணியின் பெயர் Jailor
காலியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தமிழ்நாடு சிறைத்துறை பணி காலியிடங்கள்:

சிறைத்துறை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி Jailor பணிக்கென மொத்தம் 8 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Jailor (Men) - 6 காலியிடங்கள்
 • Jailor (Special Prison for Women) - 2 காலியிடங்கள்
 • தமிழ்நாடு சிறைத்துறை Jailor பணிக்கான கல்வித்தகுதி:

 • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு டிகிரி தேர்ச்சி கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Master's degree in Criminology and Criminal Justice Administration or Master's degree in Social Work பட்டம் பெற்றவர்களுக்கு இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாடு சிறைத்துறை Jailor பணிக்கான வயது வரம்பு:

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு சிறைத்துறை Jailor பணிக்கான ஊதிய விவரம்:

  இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.36,900/- முதல் ரூபாய்.1,35,000/- வரை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு சிறைத்துறை Jailor பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

 • பதிவுக் கட்டணமாக ரூ.150/- இணையதளம் மூலமாக கட்டவேண்டும்.
 • தேர்வுக் கட்டணமாக ரூ.200/- இணையதளம் மூலமாக கட்டவேண்டும்.
 • தமிழ்நாடு சிறைத்துறை Jailor பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு சிறைத்துறை Jailor பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியான விண்ணப்பதாரர்கள் TNPSC இணையதளம் மூலம் 13.10.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  Download Notification PDF

  Apply Online

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)