TNRD Recruitment 2022

Admin
By -
0

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை | காலிபணியிடங்கள் 09 | நேர்காணல் மட்டும் | விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2022.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை 2022: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் மட்டுமே நிரப்பப்படும். இந்த பணிகளுக்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 13.09.2022 முதல் 12.10.2022 மாலை 05.45 மணி வரை பெறப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பணிகள் இனசுழற்ச்சி அடிப்படியில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பராக இருத்தல் அவசியம். இந்த பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியுள்ள விண்ணப்பதரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, திண்டுக்கல் மாவட்டம்
வகை TN Govt Jobs
காலியிடங்களின் எண்ணிக்கை 09
பணியின் இடம் திண்டுக்கல் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Official Website dindigul.nic.in


காலியிட விவரங்கள்

வேலைகளின் பெயர் காலியிடங்கள்
ஈப்பு ஓட்டுநர் 05
அலுவலக உதவியாளர் 04


கல்வி விவரங்கள், அனுபவம், சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

ஈப்பு ஓட்டுநர்

i) கல்வி தகுதி
ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
iii) சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.19,500/- முதல் ரூபாய்.62,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
iv) வயது வரம்பு விவரங்கள்
பொது பிரிவினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 32 வருடங்கள். பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 34 வருடங்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 34 வருடங்கள். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 37 வருடங்கள். ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 42 வருடங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 42 வருடங்கள்.
v) இனசுழற்சி
1. ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (ஆதரவற்ற விதவை)
2. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்
3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர)
4. பொது (பெண்) ஆதரவற்ற விதவை
5. தாழ்தப்பட்ட வகுப்பினர்

அலுவலக உதவியாளர்

i) கல்வி தகுதி
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அனுபவம் தேவையில்லை.
iii) சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700/- முதல் ரூபாய்.50,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
iv) வயது வரம்பு விவரங்கள்
பொது பிரிவினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 32 வருடங்கள். பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 34 வருடங்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 34 வருடங்கள். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 37 வருடங்கள். ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 42 வருடங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் அதிகபட்ச வயது 42 வருடங்கள்.
v) இனசுழற்சி
1. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (பெண்) ஆதரவற்ற விதவை
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பெண்) ஆதரவற்ற விதவை
3. பொது
4. தாழ்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர)

கட்டண விவரங்கள்

  • இந்த பணிக்கு விருப்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

  • தேர்ந்தெடுக்கும் முறை

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • எப்படி விண்ணப்பிப்பது

  • குறிப்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திண்டுக்கல் மாவட்ட இணையதளமான dindugul.nic.in என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10x4) Inches Postal Cover) இணைத்து அதிகார அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தபால் மூலமாகவே அனுப்ப வேண்டும்.


  • முக்கியமான தகவல்

    Start Date 13.09.2022
    End Date 12.10.2022
    Official Website dindugul.nic.in
    Official Notification Notification and Application Format
    விண்ணபங்கள் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
    154, வளர்ச்சிப்பிரிவு,
    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
    திண்டுக்கல் - 624 004.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)