திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு 05.11.2025 பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
| Latest Govt Jobs 2024 | |
| நிறுவனம் | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் |
| வகை | TN Jobs |
| பணியின் பெயர் | பல்வேறு |
| காலியிடங்கள் | 26 |
| கடைசி தேதி | 05.11.2025 |
| விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
| வேலையின் பெயர் | காலியிடம் |
|---|---|
| திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (முதன்மை திருக்கோயில்) | |
| 1. கூர்க்கா | 01 |
| 2. இரவு காவலர் | 02 |
| 3. மிருதங்கம் | 01 |
| 4. புஜங்கம் | 01 |
| 5. வேத பாராயணம் | 01 |
| 6. குடைக்காரர் | 01 |
| 7. மாலைக்கட்டி | 01 |
| 8. தமிழ்ப்புலவர் | 01 |
| 9. சமய பிரசங்கி | 01 |
| 10. சித்த மருத்துவர் | 01 |
| 11. ஓட்டுநர் | 01 |
| 12. செவிலியர் | 01 |
| 13. கணினி இயக்குபவர் | 02 |
| உபகோயில் - திருத்தணி, அருள்மிகு கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில் | |
| 14. நாதஸ்வரம் | 01 |
| உபகோயில் - திருத்தணி, அருள்மிகு சப்த கண்ணியம்மன் திருக்கோயில் | |
| 15. துப்புரவாளர் | 01 |
| உபகோயில் - மத்தூர், அருள்மிகு மகிஷாசூரமர்த்தினியம்மன் திருக்கோயில் | |
| 16. தட்டச்சர் | 01 |
| 17. பலவேலை | 01 |
| உபகோயில் - சந்தானவேணுகோபாலபுரம், அருள்மிகு சந்தானவேணுகோபால சுவாமி திருக்கோயில் | |
| 18. பலவேலை | 01 |
| உபகோயில் -கரிம்பேடு, அருள்மிகு நாதாதீஸ்வர சுவாமி திருக்கோயில் | |
| 19. நாதஸ்வரம் | 01 |
| 20. காவலர் | 01 |
| உபகோயில் -திருவாலங்காடு, அருள்மிகு வடாரண்யோஸ்வர சுவாமி திருக்கோயில் | |
| 21. தட்டச்சர் | 01 |
| 22. மேளம் (தவில்) | 01 |
| உபகோயில் -திருப்பாச்சூர், அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில் | |
| 23. நாதஸ்வரம் | 01 |
பணிக்கான கல்வித் தகுதி விபரங்கள்:-
1. கூர்க்கா:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
2. இரவு காவலர்:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
3. மிருதங்கம்:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- யாதொரு சமய நிறுவனகள் / அரசு நிறுவனகள் / யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
4. புஜங்கம்:

5. வேத பாராயணம்:

- வேத ஆகமங்கள் கற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
6. குடைக்காரர்:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
7. மாலைக்கட்டி:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- பூஜைகள் மற்றும் உற்சவங்களுக்கு தெய்வங்களை அலங்கரிப்பதற்கான மாலைகள் கட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
8. தமிழ்ப்புலவர்:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- யாதொரு பல்கலைக் கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.Lit. அல்லது M.A. அல்லது M.Lit. பட்டம் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
9. சமய பிரசங்கி:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- சமய நிறுவனங்கள் / அரசு நிறுவனங்கள் / ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
10. சித்த மருத்துவர்:
- சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பும் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டமும் (B.S.M.S) பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
11. ஓட்டுநர்:
- இலகு ரக வாகனம் மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான அரசால் அங்கீகாரம் பெற்ற தேர்வில் தேர்ச்சி.
- ஓட்டு நராக பணியாற்றியதற்கான ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
12. செவிலியர்:
- செவிலியர் (Nursing) B.Sc. (or) Diploma in Nursing பட்டயம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- செவிலியர் / பேறுகால செவிலியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
13. கணினி இயக்குபவர்:
- அரசால் / அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவங்கனத்தால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு சான்ரிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் (Computer Automation) பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
14. நாதஸ்வரம்:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- யாதொரு சமய நிறுவனகள் / அரசு நிறுவனகள் / யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
15. துப்புரவாளர்:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
16. தட்டச்சர்:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கக்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்க்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Computer Automation).
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
17. பலவேலை:
- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
| வேலையின் பெயர் | ஊதியம் |
|---|---|
| திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (முதன்மை திருக்கோயில்) | |
| 1. கூர்க்கா | ₹.15900 - 50400 |
| 2. இரவு காவலர் | ₹.15900 - 50400 |
| 3. மிருதங்கம் | ₹.18500 - 58600 |
| 4. புஜங்கம் | ₹.18500 - 58600 |
| 5. வேத பாராயணம் | ₹/15700 - 50000 |
| 6. குடைக்காரர் | ₹.10000 - 31500 |
| 7. மாலைக்கட்டி | ₹.10000 - 31500 |
| 8. தமிழ்ப்புலவர் | ₹.18500 - 58600 |
| 9. சமய பிரசங்கி | ₹.18500 - 58600 |
| 10. சித்த மருத்துவர் | ₹.36700 - 116200 |
| 11. ஓட்டுநர் | ₹.18500 - 58600 |
| 12. செவிலியர் | ₹.14000/- |
| 13. கணினி இயக்குபவர் | ₹.15000/- |
| உபகோயில் - திருத்தணி, அருள்மிகு கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில் | |
| 14. நாதஸ்வரம் | ₹.15700 - 50000 |
| உபகோயில் - திருத்தணி, அருள்மிகு சப்த கண்ணியம்மன் திருக்கோயில் | |
| 15. துப்புரவாளர் | ₹.10000 - 31500 |
| உபகோயில் - மத்தூர், அருள்மிகு மகிஷாசூரமர்த்தினியம்மன் திருக்கோயில் | |
| 16. தட்டச்சர் | ₹.15300 - 48700 |
| 17. பலவேலை | ₹.11600 - 36800 |
| உபகோயில் - சந்தானவேணுகோபாலபுரம், அருள்மிகு சந்தானவேணுகோபால சுவாமி திருக்கோயில் | |
| 18. பலவேலை | ₹.11600 - 36800 |
| உபகோயில் -கரிம்பேடு, அருள்மிகு நாதாதீஸ்வர சுவாமி திருக்கோயில் | |
| 19. நாதஸ்வரம் | ₹.15700 - 50000 |
| 20. காவலர் | ₹.11600 - 36800 |
| உபகோயில் -திருவாலங்காடு, அருள்மிகு வடாரண்யோஸ்வர சுவாமி திருக்கோயில் | |
| 21. தட்டச்சர் | ₹.15300 - 48700 |
| 22. மேளம் (தவில்) | ₹.11600 - 36800 |
| உபகோயில் -திருப்பாச்சூர், அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில் | |
| 23. நாதஸ்வரம் | ₹.15700 - 50000 |
வயது வரம்பு விபரம்:
விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 05.11.2025 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
| கடைசி தேதி | 05.11.2025 |
| Join our groups for all the latest Jobs | |
|---|---|
| Telegram | |
| Youtube | |
0 Response to "இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!"
Post a Comment