திருநெல்வேலி மண்டலம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் துறை, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் துறை, திருநெல்வேலி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 12 |
கடைசி தேதி | 25.10.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. ஹோமியோபதி மருந்தாளுநர் | 02 |
2. ஆயுஷ் மருந்தாளுநர் | 02 |
3. நுண்கதிர்வீச்சாளர் | 02 |
4. யோகா Instructor | 02 |
5. யுனானி மருத்துவர் | 01 |
6. யுனானி மருந்தாளுநர் | 01 |
7. சித்தா மருந்தாளுநர் | 02 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. ஹோமியோபதி மருந்தாளுநர் / ஆயுஷ் மருந்தாளுநர் / யுனானி மருந்தாளுநர் / சித்தா மருந்தாளுநர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ் நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டய படிப்பு மருந்தாளுநர் (ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதா / ஒருங்கிணைந்த பட்டய மருந்தாளுநர் (Diploma in Integrated Pharmacy (D.I.P.) (இரண்டு ஆண்டுகளில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. நுண்கதிர்வீச்சாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ் நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டய படிப்பு நுண்கதிர்நுட்புநர் (DRDT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. யோகா Instructor: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ் நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் BNYS / (Registration with respective board / Council of the State such as Tamilnadu board of Indian Medicine / TSMC / TNHMC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. யுனானி மருத்துவர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ் நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் BUMS, / (Registration with respective board / Council of the State such as Tamilnadu board of Indian Medicine / TSMC / TNHMC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி
பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. ஹோமியோபதி மருந்தாளுநர் | 18 முதல் 59 |
2. ஆயுஷ் மருந்தாளுநர் | 18 முதல் 59 |
3. நுண்கதிர்வீச்சாளர் | 18 முதல் 59 |
4. யோகா Instructor | 18 முதல் 59 |
5. யுனானி மருத்துவர் | 18 முதல் 59 |
6. யுனானி மருந்தாளுநர் | 18 முதல் 59 |
7. சித்தா மருந்தாளுநர் | 18 முதல் 59 |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. ஹோமியோபதி மருந்தாளுநர் | ₹.11,360/- |
2. ஆயுஷ் மருந்தாளுநர் | ₹.10,500/- |
3. நுண்கதிர்வீச்சாளர் | ₹.50,000/- |
4. யோகா Instructor | ₹.1,000/- |
5. யுனானி மருத்துவர் | ₹.21,000/- |
6. யுனானி மருந்தாளுநர் | ₹.11,360/- |
7. சித்தா மருந்தாளுநர் | ₹.11,360/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சுய ஒப்பகிட்ட கல்வித்தகுதி சான்றிதழ், சாதிச்சான்று / ஆதார் அட்டை / அனுபவச்சான்று நகல்களை நேரிடையாகவோ அல்லது தபால் மூலகாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான
வேலை வாய்ப்பு!
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம் (தொ.அ.ஈ.தி), எண்: 141-D, 6-வது குறுக்குத் தெரு மகாராஜ நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 11.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் துறையில் வேலை வாய்ப்பு"
Post a Comment