தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://drbtsi.in/ என்கிற இணையதளத்தில் Online-ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.11.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://drbtsi.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
கூட்டுறவுத்துறை, தென்காசி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. விற்பனையாளர்
2. கட்டுநர்
|
காலியிடங்கள் | 51 |
கடைசி தேதி | 07.11.2024 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. விற்பனையாளர் (Salesman) | 40 |
2. கட்டுநர் (Packer) | 11 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. விற்பனையாளர் (Salesman): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. கட்டுநர் (Packer): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
விண்ணப்பதாரர்கள் 01.07.2024-அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக் இருக்க வேண்டும். | |
i) ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் | வயது வரம்பு இல்லை |
ii) இதர வகுப்பினர் (OC) | 18 - 32 வயது |
iii) அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் | வயது வரம்பு இல்லை |
iv) இதர வகுப்பினைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் (OC) | 18 - 50 வயது |
v) இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் (OC) | 18 - 42 வயது |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. விற்பனையாளர் |
₹.6,250/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ₹.8600 - 29000/- |
2. கட்டுநர் |
₹.5,500/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ₹.7800 - 26000/ |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ₹.150/- மற்றும் கட்டுநர் விண்ணப்பக் கட்டணம் ₹.100/- செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிபெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் https://drbtsi.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலகாகவோ விண்ணப்பங்கள் பெறப்படாது.
கடைசி தேதி: 07.11.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments