நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 64 காலியிடங்கள் அறிவிப்பு

Coimbatore PHC Recruitment 2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள னக நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) மற்றும் செவிலியர் பணியாளர் (Staff Nurse) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. 

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரத் துறை,
கோவை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. நகர சுகாதார செவிலியர்கள்
2. 
செவிலியர் பணியாளர்
காலியிடங்கள் 64
நேர்காணல் தேதி 18.10.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website --

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. சுகாதார செவிலியர் 54
2. செவிலியர் பணியாளர் 10

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. நகர சுகாதார செவிலியர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Nursing / Auxiliary Nurse Midwife Course (2 years) / Diploma in General Nursing and Midwife Course (DGNM) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

2. செவிலியர் பணியாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Nursing / Diploma in General Nursing and Midwife Course (DGNM) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. நகர சுகாதார செவிலியர் 40
2. செவிலியர் பணியாளர் 35

பணிக்கான ஊதிய விவரம்:-

1. நகர சுகாதார செவிலியர் -
2. செவிலியர் பணியாளர் -

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18.10.2024-ம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், முன் அனுவப பணிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் கொரோனா பணிச்சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Coimbatore PHC Recruitment 2024

நேர்காணல் தேதி: 18.10.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter