தமிழ்நாடு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளி கல்விச் சங்கத்தின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டம் மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. பட்டதாரி ஆசிரியர் 2. காப்பாளர் 3. உடற் கல்வி ஆசிரியர் |
காலியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 10.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://nilgiris.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. பட்டதாரி ஆசிரியர் - தமிழ் | 01 |
2. பட்டதாரி ஆசிரியர் - கணிதம் | 01 |
3. பட்டதாரி ஆசிரியர் - சமூக அறிவியல் | 01 |
4. காப்பாளர் (ஆண்) | 01 |
5. உடற்கல்வி ஆசிரியர் (பெண்) | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
பட்டதாரி ஆசிரியருக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலைபட்ட படிப்பு மற்றும் கல்வியியல் பட்ட படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காப்பாளருக்கு ஏதேனும் இளங்கலைபட்ட படிப்பு மற்றும் கல்வியியல் பட்ட படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியருக்கு இளங்கலை உடற்கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் TET தேர்ச்சி பெற்று கற்பிப்பதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு விபரம்:
இந்த பதவிகளுக்கென வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் ₹.15,000/-மும், காப்பாளர்களுக்கன மாத சம்பளம் ₹.12,000/-மும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாதம் ₹.15,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அனுபவம், தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை - 643 006.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 10.08.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |