தமிழ்நாடு நீர்வளத்துறை, அவிநாசி மற்றும் குன்னத்தூர் அலுவலகங்களில் காலியாக உள்ல ஈப்பு ஓட்டுநர் பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீர்வளத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.07.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | நீர்வளத்துறை |
Notification No. | - |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | ஈப்பு ஓட்டுநர் |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://tiruppur.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈப்பு ஓட்டுநர் - 02 காலியிடம்.
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. ஈப்பு ஓட்டுநர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்ற வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமும், கண்பார்வையும் வேண்டும்.
பொதுப்பிரிவு -1 (முன்னுரிமை பெற்றவர்கள்) (கொரானா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் - உரிய சான்றுடன்) மற்றும் பட்டியலினத்தவர் (அருந்ததியர்) - 1 (ஆதரவற்ற விதவைகள்).
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
பொதுப்போட்டியில் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 32-க்கு மேற்படாமல் இருக்க வேண்டும் (ம) பட்டியலினத்தவர் (அருந்ததியர்) குறந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 37-க்குள் மேற்படாமல் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாத ஊதிய விகிதம் ₹.19500 - 71900/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், மற்றும் குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் பணியில் மூன்றாண்டு முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் உடற்தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:-
கண்காணிப்புப் பொறியாளர், நீவது, சிறப்பு திட்ட வட்டம், அவிநாசி.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 10.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |