தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம், திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் காலியாக உள்ள மைய நிர்வாகி, களப்பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tiruppur.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு நேரில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.06.2024.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட சமூக நலத்துறை |
Notification No. | - |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. மைய நிர்வாகி 2. களப்பணியாளர் 3. பல்நோக்கு உதவியாளர் |
காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேரில் |
Website | https://tiruppur.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 07 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மைய நிர்வாகி- 01 காலியிடம்.
- களப்பணியாளர் - 05 காலியிடம்
- பல்நோக்கு உதவியாளர் - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. மைய நிர்வாகி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW) / Master in Law / Master of Psychology / Sociology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.
2. களப்பணியாளர்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW) / Master in Law / Master of Psychology / Sociology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.
3. பல்நோக்கு உதவியாளர்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கல்லம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
- மைய நிர்வாகி- 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- களப்பணியாளர் - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- பல்நோக்கு உதவியாளர் -40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
- மைய நிர்வாகி- ₹. 35,000/- மாதம்
- களப்பணியாளர் - ₹. 18,000/- மாதம்
- பல்நோக்கு உதவியாளர் - ₹. 10,000/- மாதம்
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 21.06.2024 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண். 35, 36 தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்.
அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 21.06.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments