-->

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

Admin
By -
0

   

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

TNRD Virudhunagar Recruitment 2023: விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரூர் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதாவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணி நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNRD Recruitment 2023
TNRD Virudhunagar Recruitment 2023

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, விருதுநகர் மாவட்டம்
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி07.12.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர்01

கல்வித்தகுதி:

1. அலுவலக உதவியாளர்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு (01.07.2023)
அலுவலக உதவியாளர்பொதுப்பிரிவினர் 18 முதல் 32 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18 முதல் 34 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
அலுவலக உதவியாளர்₹.15,700 - 50,000/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://virudhunagar.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 08.12.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ இணையதளம்https://virudhunagar.nic.in/
விண்ணப்படிவம்Click to Download

Post a Comment

0Comments

Post a Comment (0)