தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு:- திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வளப்பயிற்றுநர் (District Resource Person) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://tirunelveli.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.04.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருநெல்வேலி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | மாவட்ட வளப்பயிற்றுநர் (District Resource Person) |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 10.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://tirunelveli.nic.in/ |
District Resource Person பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட வளப்பயிற்றுநர் (District Resource Person) - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
மாவட்ட வளப்பயிற்றுநர் (District Resource Person):-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master Degree in Sociology, Social Work, Social Work Management பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஆறு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 வருடம் in Social Development Institution Building and Capacity Building (Especially SHG federation Model) work with poverty reduction programmes அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கான வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை
மாவட்ட வளப்பயிற்றுநர் பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பணிக்கான சம்பள விபரங்கள் அறிவிப்பாணையில் குறிப்பிடவில்லை.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வளப்பயிற்றுநர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10.04.2023 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:-
Notification | Click Here |
கடைசி தேதி | 10.04.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |