ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நீலகிரியில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நீலகிரியில் வேலை வாய்ப்பு:- இந்தியன் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional-I and Young Professional-II பதவிகளை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், பிராந்திய நிலையம், வெலிங்டன், நீலகிரி-ல் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பதவிகள் இரண்டும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் நாள் 17.04.2023 மற்றும் 18.04.2023

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நீலகிரியில் வேலை வாய்ப்பு
ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நீலகிரியில் வேலை வாய்ப்பு

Page Contents

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், நீலகிரி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Young Professional-I (YP-I)
Young Professional-II (YP-II)
காலியிடங்கள் 06
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் நாள் 17.04.2023 மற்றும் 18.04.2023
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://www.iari.res.in/index.php/en/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Young Professional-I (YP-I) - 04
  2. Young Professional-II (YP-II) - 02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Young Professional-I (YP-I):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Agriculture of relevant Biological Sciences பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Desirable:- Knowledge of Computers, Data handling and exposure to Statistical analysis.

Young Professional-II (YP-II):

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Post Graduate Degree in relevant subjects or Degree in Agriculture Sciences பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Desirable:- Masters Degree in Plant Breeding / Genetics and Plant Breeding / Plant Pathology / Mycology and Plant Pathology / Plant Biotechnology / Genomics / Life Sciences

Expertise in Molecular Biology / Molecular Plant Pathological Methods / Bioinformatics. Working experience in field / Agriculture crops.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

Young Professional-I (YP-I):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு அதிகபட்சம் 35 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.(SC / ST மற்றும் பெண்களுக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு மற்றும் OBC க்கு மூன்று ஆண்டுகள் வயது தளர்வு.)

Young Professional-II (YP-II):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு அதிகபட்சம் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். (SC / ST மற்றும் பெண்களுக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு மற்றும் OBC க்கு மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

Young Professional-I (YP-I):

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் Rs. 25000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional-II (YP-II):

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் Rs.35,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ICAR-ன் அதிகாரபூர்வ இணையதளமான https://www.iari.res.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 17.04.2023 மற்றும் 18.04.2023 ஆம் தேதி காலை 09.30 மணிக்கு ICAR-IARI Regional Station, Wellington, Nilgiri - 643 231-ல் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:-

ICAR-IARI Regional Station,
Wellington,
Nilgiri - 643 231.
Download Notification &
Application Format
நேர்காணல் தேதி: 17.04.2023
18.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter