ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://nilgiris.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.02.2023.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கோத்தகிரி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | இரவு காவலர் |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://nilgiris.nic.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இரவு காவலர் - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15700-50000/- (நிலை-1) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது இன சுழற்சி முறையில் ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தின் இணையதளமான https://nilgiris.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 10.02.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10x4 Inches Postal Cover) கட்டாயம் இணைத்து அணுப்ப வேண்டும்.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
வளர்ச்சி பிரிவு,
கோத்தகிரி.
Download Notification and Application Form
கடைசி தேதி: 10.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments