சென்னை அஞ்சல் துறையில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

India Post-MMS Chennai Recruitment | Various Posts | Apply through post | Notification can be downloaded @ indiapost.gov.in

India Post-MMS Chennai Recruitment 2022: இந்திய அஞ்சல் துறையானது தமிழ்நாட்டில், சென்னை மெயில் மோட்டார் சர்வீஸில் (Mail Motor Service, Chennai) காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கான அறிவிப்பாணையை இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 09.01.2023-க்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

India Post Recruitment 2022
India Post Recruitment 2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Department of Post, Mail Motor Services, Chennai, India
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

MMS Chennai Recruitment பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 07 என அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களின் விவரம் பின்வருமாறு:-

  • 1. M.V.Mechanic (Skilled) - 04
  • 2. M.V.Electrician (Skilled) - 01
  • 3. Copper & Tinsmith (Skilled) - 01
  • 4. Upholster (Skilled) - 01
  • Skilled artisans Recruitment பணிக்கான கல்வித்தகுதி:

    Mail Motor Service பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்திடம் I.T.I சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. M.V.Mechanic பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் HMV ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Skilled artisans Recruitment பணிக்கான வயது வரம்பு:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினர் மற்றும் EWS-ஐ சார்ந்தவர்கள் குறைந்தபட்ச வயது 18 முதல் 30 வயதிற்குள் 01.07.2022 தேதியின்படி இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40-ற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SC பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வரை வயது தளர்வு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்கள் வரை வயது தளர்வு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    MMS Chennai Recruitment பணிக்கான ஊதிய விவரம்:

    இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது ஊதிய குழுவின்படி (Level-2) ரூ.19,900/- to ரூ.63,200/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Skilled artisans Recruitment பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்துடன் ரூபாய்.100/-க்கான Indian Postal Order (IPO) "The Manager, Mail Motor Service, Chennai" என்ற விலாசத்திற்கு எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.400/- செலுத்த வேண்டும். SC/ST/Women பிரிவினரைச் சார்ந்தவர்கள் விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MMS Chennai Recruitment பணிக்கு இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:

    கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள், வயது சான்றிதழ், தொழில்நுட்ப சான்றிதழ், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை மட்டும் இணைத்து அதிக்காரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து நகல்களிளும் கட்டாயம் சுய ஒப்பம் இட்டு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MMS Chennai Recruitment பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் படித்த தொழில்நுட்ப பிரிவில் Competitive Trade Test-ன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MMS Chennai Recruitment பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை கவனமாக பூர்த்தி செய்து, சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு விரைவுத்தபால் அல்லது பதிவு அஞ்சல் (Speed Post / Registered Post) மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Skilled artisans Recruitment பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    The Senior Manager (JAG),
    Mail Motor Service,
    No.37, Greams Road,
    Chennai-600 006.

    Download Notification & Application Format

    கடைசி தேதி:09.01.2023

    Join our below-given groups for all the latest Jobs
    Whatsapp Telegram
    Instagram Google News
    Facebook Youtube
    Twitter