திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.

திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.

திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.
திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.

திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட சமூக அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர் மற்றும் பாதுகாவலர்/ஓட்டுநர் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்தது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.11.2022 மாலை 05.30-க்குள் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (dswo.tpr@gmail.com)மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகம், திருப்பூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர்
 • மைய நிர்வாகி
 • மூத்த ஆலோசகர்
 • தகவல் தொழில்நுட்ப பணியாளர்
 • களப்பணியாளர்
 • பாதுகாவலர் / ஓட்டுநர்
 • காலியிடங்கள் 06
  விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
  விண்ணப்பிக்கும் முறை Offline

  ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான காலியிடங்கள்:

  ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-

 • மைய நிர்வாகி - (01)
 • மூத்த ஆலோசகர் - (01)
 • தகவல் தொழில்நுட்ப பணியாளர் - (01)
 • களப்பணியாளர் - (01)
 • பாதுகாவலர் / ஓட்டுநர் - (02)
 • ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான கல்வித்தகுதி:

  1. மைய நிர்வாகி

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி Master of Social Work (MSW)/Bachelor's Degree in Law படித்தவராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் குறைந்தது ஐந்து வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  2. மூத்த ஆலோசகர்

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி Master of Social Work (MSW)/Master Degree in Clinical Psychology படித்தவராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் குறைந்தது மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. தகவல் தொழில்நுட்ப பணியாளர்

  இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம் எனவும் திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி Graduate with Diploma in Computer / IT படித்தவராக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  தகவல் தொழில்நுட்பத்துறையில் (Data Management, Web based reporting and Video Conferencing) குறைந்தது மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  4. களப்பணியாளர்

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி Master of Social Work (MSW) படித்தவராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  குறைந்தது மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. பாதுகாவலர் / ஓட்டுநர்

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான வயது வரம்பு:

  மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர்

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர்

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. பாதுகாவலர் / ஓட்டுநர்

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான ஊதிய விவரம்:

  1. மைய நிர்வாகி - Rs.30,000/- Per Month

  2. மூத்த ஆலோசகர் - Rs.20,000/- Per Monrh

  3. தகவல் தொழில்நுட்ப பணியாளர் - Rs.18,000/- Per Month

  4. களப்பணியாளர் - Rs.15,000/- Per Month

  5. பாதுகாவலர் / ஓட்டுநர் - Rs.15,000/- Per Month

  ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  இந்த பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளமான www.tiruppur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் (dswo.tpr@gmail.com) மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  மாவட்ட சமூக நல அலுவலர்,
  அறை எண்.35, 36 தரைதளம்,
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
  திருப்பூர்.

  Download Notification and Application Format PDF

  கடைசி தேதி: 10.11.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group