இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு. மருந்தாளுனர் (Pharmacist) வேலை
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு. மருந்தாளுனர் (சித்தா) வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க! |
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனியில் மருந்தாளுநர் (Pharmacist) பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது மற்றும் விண்ணப்பப்படிவத்தை திருக்கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (palanimurugan.hrce.tn.gov.in) அல்லது (hrce.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும் தமிழ்நாட்டை சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10.11.2022 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, Dindigul |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | மருந்தாளுனர் (சித்தா) Pharmacist (Sidha) |
காலியிடம் | 03 |
கடைசி தேதி | 10.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான காலியிடங்கள்:
மருந்தாளுனர் சித்தா பணிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். (தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது).
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான வயது வரம்பு:
இந்த படைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்த ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூபாய்.15,000/- தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 10.11.2022 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட நகல்களை மட்டுமே இணைத்து அனுப்ப வேண்டும். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை நேர்முகத் தேர்வின் போது எடுத்து வரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி-624601.
Download notification and application format
கடைசி தேதி: 10.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |