தமிழக அரசு பள்ளிகளில் 320 சமையல் உதவியாளர் காலிபணியிடங்கள் அறிவிப்பு!

Cuddalore Nutrition Recruitment 2025

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர்கள் நேரடி நியமனம் மூலம் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், கடலூர் மாநகராட்சி ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தகவல் தெரிந்துகொள்ளலாம்.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.04.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://salem.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் சத்துணவு திட்டம், கடலூர்
வகை TN Jobs
பணியின் பெயர் சமையல் உதவியாளர்
காலியிடங்கள் 320
கடைசி தேதி 29.04.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
சமையல் உதவியாளர் 320

🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 சமையல் உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!🔊

பணிக்கான தகுதி விபரங்கள்:-

1. சமையல் உதவியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ - க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி - குக்கிராமம் - வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை). மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கீழ்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் (உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்).

  1. குறைவான பார்வைத்திறன் (மூக்கு கண்ணாடி மூலம் பார்வை சரிசெய்யப்பட்டது)
  2. உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
  3. குணப்படுத்தப்பட்ட தொழு நோய் (40 சதவீதம் கைகளின் முழு செயல்பாட்டுத்திறன் உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது)
  4. திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள்
  5. குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான)
விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. சமையல் உதவியாளர் ₹.3000 - 9000/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. சமையல் உதவியாளர் 1. 21 வயது முதல் 40 வரை
(பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)
2. 18 முதல் 40 வரை (பழங்குடியினர்)
3. 20 முதல் 40 வரை
(விதவை கணவனால் கைவிடப்பட்டோர்)

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / நகராட்சி / மாநகராட்சி அலுவலகத்தில் கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல்களுடன் வேண்டும்.

  1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
  3. குடும்ப அட்டை
  4. இருப்பிடச் சான்று
  5. ஆதார் அட்டை
  6. சாதிச் சான்று
  7. விதவை / கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்றோர் பெண்கள் சான்றிதழ்
  8. மாற்றித் திறனாளிகள், அதற்கான சான்றிதழ்

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 29.04.2025
அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


0 Response to "தமிழக அரசு பள்ளிகளில் 320 சமையல் உதவியாளர் காலிபணியிடங்கள் அறிவிப்பு!"

Post a Comment