தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு

Thiruvannamalai DHS Recruitment
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள Laboratory Technician Grade-III மற்றும் Pharmacist காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://karur.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம், திருவண்ணாமலை
வகை TN Govt Jobs
பணியின் பெயர்
பல்வேறு
காலியிடங்கள் 03
கடைசி தேதி 06.12.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. வேலையின் பெயர் காலியிடம்
1. Laboratory Technician Grade-III 02
2. Pharmacist 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Laboratory Technician Grade-III: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருவருட Medical Laboratory Technology Course, Director of Medical Education அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ன் நல்ல உடல் தகுதியுடனும், நல்ல பார்வை மற்றும் வெளி வேலை செய்ய விருப்பம் உள்ளவராக இருத்தல் அவசியம்.

2. Pharmacist: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy அல்லது Bachelor of Pharmacy அல்லது Pharm.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Tamil Nadu Pharmacy Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு சான்றிதழை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு விபரம்:

S.No. வேலையின் பெயர் வயது வரம்பு
1. Laboratory Technician Grade-III 18 years above
2. Pharmacist 18 years above


பணிக்கான ஊதிய விவரம்:-
S.No. வேலையின் பெயர் ஊதியம்
1. Laboratory Technician Grade-III ₹.13,000/-
2. Pharmacist ₹.15,000/-



பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

செயல்பாட்டு செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

கடைசி தேதி: 06.12.2024





Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு"

Post a Comment