தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் (Office Assistant cum Driver) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistants) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.tnerc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் 2. அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 31.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | http://www.tnerc.gov.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் | 01 |
2. அலுவலக உதவியாளர் | 04 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicles [LMV]) உரிமம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடலமைப்பு மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
2. அலுவலக உதவியாளர்:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடலமைப்பு மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
1. அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
நியமனம் செய்யப்பட்ட தேதியில் விண்ணப்பதாரர்கள் 30 வயது பூர்த்தியடைந்திருக்கக்கூடாது.
2. அலுவலக உதவியாளர்
நியமனம் செய்யப்பட்ட தேதியில் விண்ணப்பதாரர்கள் 30 வயது பூர்த்தியடைந்திருக்கக்கூடாது.
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் | ₹. 15,700 - 50,000/- |
2. அலுவலக உதவியாளர் | ₹. 15,700 - 50,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The Secretary, Tamilnadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.Vi.Ka. Industrial Estate, Guindy, Chennai - 600 032.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 31.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு!"
Post a Comment