கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு

Priya
By -
0

அரசு கவின் கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு:- கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் காலியாக உள்ள மூன்று திறன்பெறா உதவியாளர் (Unskilled Assistant) பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://thanjavur.nic.in/ என்கிற  இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களும் இருந்துவிண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

                     கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு

அமைப்பு:-

கலை பண்பாட்டுத்துறை, அரசு கவின் கலை கல்லூரி - கும்பகோணம் -தஞ்சாவூர் மாவட்டம்

பதவிகளின் பெயர்:-

திறன்பெறா  உதவியாளர் (Unskilled assistant)

பதவிகளின் காலியிடங்கள்:-

 திறன்பெறா  உதவியாளர் (Unskilled assistant) - 03

சம்பள விபரங்கள்:- 

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Level -1 ரூபாய். 15,700/- to ரூபாய். 50,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி விவரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது OC-32 , MBC,BCM,BCO-34, SC,SC(A) ST-க்கு 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:-

தஞ்சாவூர் மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

12.07.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரப் அதிகாரபூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
முதல்வர்,
அரசு கவின் கலைக்கல்லூரி,
மேலக்கோட்டையூர்,
சுவாமிமலை மெயின் ரோடு,
மேலக்காவேரி போஸ்ட்,
கும்பகோணம், தஞ்சாவூர் - 612002


அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-


தமிழக அரசு வேலைகள் - Click Here 

Post a Comment

0Comments

Post a Comment (0)