-->

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவள்கலுடன்!

Admin
By -
0

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு திருப்பூர் மாவட்ட சுகதாரச்சங்கம் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician, TB Health Visitor பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tiruppur.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு
மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Lab Technician
2. TB Health Visitor
காலியிடங்கள் 03
கடைசி தேதி 24.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tiruppur.nic.in

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஆய்வுகூட நுட்புனர் (Lab Technician) - 02 காலியிடங்கள்
  2. சுகாதார மேற்பார்வையாளர் (TB Health Visitor) - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. ஆய்வுகூட நுட்புனர் (Lab Technician)

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (10,+2) அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுகூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி:- தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சுகாதார மேற்பார்வையாளர் (TB Health Visitor)

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (10,+2) அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் MPW / ANM / Health Worker பயிற்சி பட்டம் அல்லது பட்டயம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி:- தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாநில சுகாதாரச் சங்கம் - NTEP-ன் வழிக்காட்டுதல்படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 24.03.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம்:-

அறை எண்:120,முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் - 641 604.
நாள்: 27.03.2023
நேரம்: காலை 10.00 AM

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம் - அறை எண்-1,
கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்,
அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்),
திருப்பூர் - 641 604.

Notification Click Here
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.03.2023
நேர்காணல் தேதி 27.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)