ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவர் (Data Entry Operator) வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவர் (Data Entry Operator) வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!

Data Entry Operator Recruitment 2022
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவர் (Data Entry Operator)  வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவர் (Data Entry Operator) வேலை வாய்ப்பு:- சிவகங்கை மாவட்ட நிர்வாகம் திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (Data Entry Operator) தலா ஒன்று வீதம் மொத்தம் நான்கு (04) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த வேலை நேர்காணல் மூலமாக நிரப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான அறிவிப்பாணையை சிவகங்கை மாவட்ட இணையதளமான www.sivaganga.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.11.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியம், சிவகங்கை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் கணினி இயக்குபவர்
(Data Entry Operator)
காலியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலியிடம் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் பின்வருமாறு:-

 • திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 01 காலியிடம்
 • எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 01 காலியிடம்
 • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 01 காலியிடம்
 • கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 01 காலியிடம்
 • கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான கல்வித்தகுதி:

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் (Typwritting English and Tamil Lower) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான வயது வரம்பு:

  இந்த பணிக்கு வயது வரம்பு ஆனது 01.10.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 32 வயதிற்கு மிகாமலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதில் மிகாமலும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான ஊதிய விவரம்:

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக Rs.12,000/- தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  இந்த பணிக்கு என எந்த விதமான விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  தகுதியான நபர்களை உரிய முறையில் கணினி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை சுயசான்றொப்பம் இட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை.

  Download Notification PDF

  கடைசி தேதி: 15.11.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group