தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு 2022 |

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு 2022:தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு (Child Welwafare Committee) மற்றும் இளைஞர் நீதி குழுமத்தில் (Juvenile Justice Board) காலியாக உள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியான நபர்களிடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருப்பத்தூர் மாவட்ட இணையதளமான tirupathur.nic.in என்கிற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு சேர விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.09.2022-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறை
பணியின் பெயர் Assistant cum Data Entry Operator
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Assistant cum Data Entry Operator பணிக்கான காலியிடங்கள்:

மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒரு காலி இடமும் மற்றும் இளைஞர் நீதி குழுமத்தில் ஒரு காலி இடமும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Assistant cum Data Entry Operator பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை முடித்திருக்க வேண்டும். கணினி தொழில்நுட்ப சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant cum Data Entry Operator பணிக்கான வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 40 வருடம் மிகாமல் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Assistant cum Data Entry Operator பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.9,000/- (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத.ு

Assistant cum Data Entry Operator பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.

Assistant cum Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

Assistant cum Data Entry Operator பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான tirupathur.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக பூர்த்திசெய்து, கல்வித்தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் சுய ஒப்பம் நகல்களுடன் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant cum Data Entry Operator பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
எண்.4C10, 4-வது தளம் 'C' பிளாக்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
திருப்பத்தூர் - 635 601.

Download Notification PDF

Download Application Format

கடைசி தேதி:27.09.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group